விரைவில் வருகிறது ஜென்டில்மேன் 2! – சர்ப்ரைஸாக வந்த அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:14 IST)
தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது.

தமிழில் காதல், ரட்சகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போது “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் இதுகுறித்து ட்விட்டரில் சர்ப்ரைஸாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் இதில் நடிகர்கள், இயக்குனர் யார் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்