எஸ் ஜே சூர்யா படத்துக்கு தடை… ஞானவேல் ராஜா அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (17:32 IST)
எஸ் ஜே சூர்யா தன்னிடம் வாங்கியக் கடன் தொகையை கொடுக்காமல் இருப்பதாகக் கூறி அவர் நடிக்கும் படங்களுக்கு தடையாணை வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக அறியப்பட்ட எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்தில் நடிப்பில் இறங்கினார். ஆனால் இயக்குனராக ஜொலித்த அளவுக்கு நடிகராக பரிணமிக்க முடியவில்லை. இதையடுத்து இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அவர் இப்போது கதாநாயகன், வில்லன் எனக் கலந்துகட்டி அடித்துவிடுகிறார். இடையில் அவர் இயக்கி நடித்து இசையமைத்த இசை திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அந்த படத்தால் அவர் பல கோடி கடனாளி ஆனார்.

அப்போது அவருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு மிகப்பெரிய தொகையை கடனாக அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் அந்த தொகையை எஸ் ஜே சூர்யா திருப்பி அளிக்கவில்லை என்று அவர் நடிக்கும் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து எஸ் ஜே சூர்யா எப்படியாவது அந்த படத்தை திருப்பி செலுத்தி தன்னால் தான் நடிக்கும் படங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என முடிவு செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்