தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக அறியப்பட்ட எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்தில் நடிப்பில் இறங்கினார். ஆனால் இயக்குனராக ஜொலித்த அளவுக்கு நடிகராக பரிணமிக்க முடியவில்லை. இதையடுத்து இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அவர் இப்போது கதாநாயகன், வில்லன் எனக் கலந்துகட்டி அடித்துவிடுகிறார்.
கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மூலம் மீண்டும் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வரும் நிலையில் அந்த சந்தோஷத்தில் இப்போது மீண்டும் இயக்குனர் ஆகும் முடிவில் உள்ளாராம். நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை நடித்துக் கொடுத்த பின்னர் கில்லர் என்ற படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்க உள்ளாராம்.