ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் ‘வார் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

vinoth

திங்கள், 17 மார்ச் 2025 (10:03 IST)
'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் வட இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்நதார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்' திரைப்படம் வெளியானது.

இதன் அடுத்தபாகம் 'வார் 2' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி வார் 2 திரைப்படம் ரிலீஸாகும் என யாஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஹ்ருத்திக் ரோஷன் காயமடைந்தார். அதனால் படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது படக்குழு ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்