இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு அந்த படத்தின் பூஜை நடந்தது. விரைவில் ஷூட்டிங் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல மாதங்களாக அதுபற்றி எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இன்னும் ஜூனியர் என் டி ஆர் இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை. அவர் மார்ச் மாதத்தில் இருந்து கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கு டிராகன் என்று பெயர் வைக்கலாம் என பிரசாந்த் நீல் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் சமீபத்தில் ரிலீஸான பிரதீப்பின் டிராகன் படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் அதே பெயரில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் டைட்டிலை மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாம். இதனால் படத்துக்கு புதிய டைட்டில் வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.