ஜூனியர் என் டி ஆரின் அடுத்த படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர்?

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (08:34 IST)
ரஜினி, கமல்,அஜித், விஜய் என தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் தற்போது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி இசையமைப்பாளராக மாறி வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆர் 30 என்ற படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூர், முதல் முறையாக தென்னிந்திய சினிமாவில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்