திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்
தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் வயது முதிர்வால் காலமானார்.
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக ஜூடோ ரத்தினம் பணிபுரிந்துள்ளார் என்பதும் தமிழ் உள்பட பல மொழிகளில் சுமார் 1500 திரைப்படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்கள் இவரிடம் உதவியாளர்களான பணி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவாக இருந்த ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 93. எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களில் பணிபுரிந்த ஜூடோ ரத்தினத்தின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.