மார்ச்சில் தொடங்குகிறது கமல்ஹாசனின் அடுத்த படம்.. இயக்குனர் யார்?

புதன், 25 ஜனவரி 2023 (10:07 IST)
இயக்குனர் வினோத், துணிவு படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவை இரண்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்ததும் கமல், மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்