விஜய் மிஸ் செய்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:45 IST)
விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாக்க திட்டமிட்டிருந்த இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் என அறிவிக்கப்பட்டது
 
இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண்என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்றநிறுவனம் தயாரித்து வருகிறது. தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படம் வரும் மே அல்லது ஜூன் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மிஸ் செய்த இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக ஒரு புதுமுகத்தை வைத்து தைரியமாக இயக்கிவரும் கவுதம் மேனன் இந்த படத்தை எப்படி உருவாகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்