ஜெயம் ரவி படத்தின் அடுத்த அப்டேட்.....ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (22:32 IST)
பூலோகம் திரைப்படத்தை இயக்கிய  கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் அகிலன்.

இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா இருவரும் நடித்து வருகின்றனர். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்,.ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயிண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தின், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு வெளியான நிலையில், இப்படத்தின் மேக்கின் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், அகிலன் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளதுஅதாவது நாளை இப்படத்தின் டீசர் ( ஜூன் 10) டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்,  அவர் ஆதி பகவன் படத்திற்குப் பிறகு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்