ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் ‘எம் குமரன்S/O மகாலட்சுமி’ பட ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
சனி, 8 மார்ச் 2025 (14:30 IST)
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), அசின் மற்றும் நதியா அகியோர் நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

ஜெயம் ரவி தனது அண்ணன் இயக்கத்தில் இரண்டாவதாக நடித்த திரைப்படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இதில் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை நதியா தமிழ் சினிமாவில் நடித்தார். அம்மா செண்ட்டிமெண்ட், அப்பா செண்ட்டிமெண்ட் இடையில் காதல், காமெடி என அக்மார்க் குடும்ப ரசிகர்களுக்கான மசாலாப் படமாக வெளியான எம் குமரன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் ரிலீஸாகி 20 ஆண்டுகளைக் கடந்துள்ள எம் குமரன் திரைப்படம் தற்போது ரி ரிலீஸாகவுள்ளது. வரும் 14 ஆம் தேதி இந்த படம் ரி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்