ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

vinoth

ஞாயிறு, 9 மார்ச் 2025 (13:23 IST)
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனா.  90 களில் நிறைய படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன் பின்னர் சில படங்களில் கவர்ச்சி நடிகை வேடத்தில் நடித்தார். இடையில் பிரபல பாடகர் எஸ் பி பி சரண் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த சர்ச்சைகளால் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தே காணாமல் போன அவர், ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஸ்மோக்’ என்கிற வெப்சீரிஸ் மூலமாக இயக்குனராக கம்பேக் கொடுக்கவுள்ளார். இந்த தொடர் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக அவர் பல நேர்காணல்களை அளித்து வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் ஜெய் பற்றி பேசும்போது “ஜெய் ஒரு ப்ளே பாய். பக்காவான ஊசைக் குசும்பன். அவன் பாதையை ஏன் மாற்றிக் கொண்டான் என்று தெரியவில்லை. நான் கேள்விப்பட்டவரை சமீபகாலமாக அவன் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை என்று சொல்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்