ஷங்கர், முருகதாஸ், அட்லி வரிசையில் லோகேஷ் கனகராஜ்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (07:36 IST)
பிரபல இயக்குனர்கள் ஓரிரு படங்கள் இயக்கிய பின்னர் திடீரென தயாரிப்பாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் ஷங்கர், முருகதாஸ், அட்லி, பா ரஞ்சித் வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் 
 
மேற்கண்ட இயக்குநர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களை இயக்குனராக்க தயாரிப்பாளராக மாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் தற்போது தன்னுடன் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்காக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்
 
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தை ரத்தினகுமார் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் மாஸ்டர் படத்தில் லோகேஷ் உடன் பணிபுரிந்தவர் என்பது மட்டுமன்றி மேயாதமான், ஆடை படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்