இயக்குனருக்கே தெரியாமல் ஓடிடியில் ரிலீஸா? ‘பூமி’ படம் குறித்து பரவும் வதந்திகள்!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:38 IST)
ஜெயம் ரவி நடித்த 25வது திரைப்படமான ‘பூமி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதுகுறித்த விளம்பரமும் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்தது இயக்குனருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் தெரியாமல் நடந்ததாக ஒரு வதந்தியை ஒரு சிலர் வீடியோக்கள் மூலம் பரப்பி வருகின்றார்கள் 
 
ஆனால் உண்மையில் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தீவிர ஆலோசனைக்கு பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்ததாகவும், தேவை இல்லாமல் வேலை வெட்டி இல்லாத ஒருசிலர் ஆன்லைனில் வீடியோக்கள் மூலம் இதுபோன்ற வதந்தியை பரப்பி வருவதாகவும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானோர் கூறுகின்றனர்.
 
அதேபோல் இந்த படம் ஓடிடியில் விற்பனையானதாக தொகை குறித்தும் வதந்தி பரவி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு இந்த படம் விற்பனை ஆகவில்லை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான கண்டனங்களைத் திரை துறையில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்