ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் சென்சார் & ரன்னிங் டைம் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:43 IST)
ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

என்றென்றும் காதல் மற்றும் மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 25 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் ரிலீஸ் ஆகாமல் இப்போது செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படம் 2 மணிநேரம் 33 நிமிடம் ஓடும் எனவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்