பொன்னியின் செல்வனால் கிடைத்த மாஸ்… ஒரு விளம்பரத்துக்காக ஜெயம் ரவி வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (15:57 IST)
கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முதல்பாகத்தை கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டனர்.. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு பிரபலத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி, தற்போது நடித்துள்ள ஒரு விளம்பரத்துக்காக சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்