ஆனால் அதன் பிறகு அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் நீண்டகாலமாக தமிழ் ரீமேக் பற்றி பேச்சுகள் எழுந்தாலும், அதில் நடிக்கப் போகும் நடிகர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாகவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை மாதவன் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது.