ஷாருக்கானின் ‘ஜவான்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? புதிய தகவல்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:22 IST)
ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி நடித்த ‘ஜவான்’ திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை தாண்டிவிட்ட நிலையில் ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில்  செப்டம்பர் முதல் வாரம் இந்த படம் வெளியான நிலையில் அக்டோபர் முதல் வாரம் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிறுவனம் ‘ஜவான்’ திரைப்படத்தின் அனைத்து மொழிகளின் உரிமையை 250 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்