ஜெய் நடிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (17:14 IST)
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகும் பிரேக்கிங் நியூஸ் திரைப்படம் சூப்பர் ஹீரோ படமாக உருவாக உள்ளதாம்.

நடிகர் ஜெய் நடிப்பில் பார்ட்டி, சிவ சிவா மற்றும் எண்ணித்துணிக ஆகிய படங்கள் முடிந்து இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளன. அதனால் ஜெய்க்கு இப்போது மிகப்பெரிய வெற்றிப் படம் தேவைப்படுகிறது. இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்கும் இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக உருவாக உள்ளதாம். தமிழில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் பெரிதாக ஓடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்