சுயநலமிகளை புரிந்து கொள்வோம்: ‘ஜெய்பீம்’ பட குறித்து எச்.ராஜா டுவிட்!
புதன், 3 நவம்பர் 2021 (16:20 IST)
சூர்யாவின் ஜெய்பீம் படத்தை தமிழ்நாடே புகழ்ந்து கொண்டு வரும் நிலையில் தமிழக பாஜக பிரபலங்களில் ஒருவரான எச் ராஜா அந்த படத்தை விமர்சனம் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழக பாஜக பிரபலம் எச் ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நம் குழந்தைகள் மூன்று மொழிகள் படிக்க கூடாது என்றவர் தன் படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடுகிறாராம், சுயநலமிகளை புரிந்து கொள்வோம் என்று பதிவு செய்துள்ளார்
சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் ஓடிடியில் வெளியானதை அடுத்து அவர் இவ்வாறு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எச். ராஜாவின் இந்த டுவிட்டுக்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது