தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக பிரபல ஹீரோயின்!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (07:46 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் சில தினங்களுக்கு முன்னர் பூஜை வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்தது. படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை இவானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்