வெந்து தணிந்தது காடு.. பரிசு மழைய போடு..! – சிம்புவுக்கு ஐசரி கணேஷ் குடுத்த பரிசு!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (08:52 IST)
சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசு வழங்கியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. கடந்த வாரம் வெளியான இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. முக்கியமாக இந்த படத்தின் சிம்புவின் வித்தியாசமான நடிப்பு பலராலும் புகழப்பட்டு வருகிறது.

வெந்து தணிந்தது காடு படம் வெற்றி பெற்றதால் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சியில் உள்ளார். அதை சிறப்பிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்ட் பைக்கும், நடிகர் சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றையும் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்