விமர்சனம் செய்வதால் எனக்கு காசு வருகிறதா?.... நடிகர் கூல் சுரேஷ் அழுகை வீடியோ!

புதன், 21 செப்டம்பர் 2022 (15:05 IST)
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் ரிலீஸான நிலையில் படத்தைப் பார்க்க சிம்புவின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் கூல் சுரேஷ் சிவப்பு நிற ஆடி காரில் திரையரங்குக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கார் மீது ஏறி ஆட்டம் போட கண்ணாடி உடைந்து சேதாரம் ஆனது.

தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தைப் பற்றி பேசி பிரபலமானார் கூல் சுரேஷ். பல திரைப்படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று மிகை உணர்ச்சியோடு அவர் பேசுவது ரசிகர்களுக்கு வேடிக்கையாக அமைந்தது. மேலும் கூல் சுரேஷ் பணம் வாங்கிக் கொண்டு படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார் என்று கருத்துகளும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ “விமர்சனம் செய்வதால் எனக்குக் காசு எதுவும் வருவதில்லை. நான் எனது வீட்டுக்கு வாடகை கூட கட்டமுடியாமல் தவிக்கிறேன். நான் எதற்காக விமர்சனம் செய்கிறேன். ரசிகர்களுக்காகவும் என் தலைவன் சிம்புவுக்காகவும்தான். சிம்புவே என்னிடம் VTK படத்துக்கு நீ விளம்பரம்  செய்துள்ளாய் என கூறினார்.” என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்