சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை செய்யவில்லை என்றாலும் படக்குழுவினர் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிவருகின்றனர். அந்தவகையில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதமுக்கு விலையுயர்ந்த ராயல் என்பீல்டி பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சமீபத்தில் கமல் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ்க்கு கார் ஒன்றை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.