'தளபதி 62 படத்தின் டைட்டில் 'வேற லெவல்?

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (07:59 IST)
இளையதளபதி விஜய் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ளதை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு அவர் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளது. சன் டிவியில் வெளிவரவுள்ள இந்த டைட்டில் என்னவாக இருக்கும் என்று வெகு ஆர்வத்துடன் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
 
இந்த நிலையில் ஒரு விஜய் ரசிகர் இந்த படத்தின் டைட்டில் 'வேற லெவல்' என்று ஒரு போஸ்டரை போட்டோஷாப்பில் வடிவமைத்து இணையத்தில் வைரலாக்கியுள்ளார். ஆனால் இந்த டைட்டில் அதிகாரபூர்வமானது இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உண்மையான டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரும் என்றும் அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து 'இது டைட்டில் இல்லடா' என்ற போஸ்டரை இன்னும் சில விஜய் ரசிகர் வடிவமைத்து அந்த போஸ்டருக்கு போட்டியாக வைரலாக்கியுள்ளதால் டுவிட்டரே பரபரப்பில் உள்ளது. 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்