இந்தியில் விவேகம் படைத்த புதிய சாதனை

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (19:22 IST)
அஜித் நடித்த விவேகம் படம் ஹந்தியில் டப் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியாகி புதிய சாதனையை படைத்துள்ளது.
 
அஜித் நடிப்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் விவேகம். சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படத்தில், அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விவேக் ஒபரோய் வில்லனாக நடித்திருந்தார். 
 
அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தியகாராஜன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
 
இந்நிலையில், இப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியாகி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட டப்பிங் படம் என்ற பெருமையை பெற்று சாதனையை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்