ஹீரோயினாகிறார் அழகிய தமிழச்சி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (11:21 IST)
சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த ‘அழகிய தமிழச்சி’ அக்‌ஷரா கவுடா, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

 
 
மாடல் அழகியான அக்‌ஷரா கவுடா, அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் ‘அழகிய தமிழச்சி’ பாடலுக்கு நடனமாடினார். விஜய்யின்  ‘துப்பாக்கி’ உள்பட சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றினார். ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
 
இந்நிலையில், ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் அக்‌ஷரா. ‘மீறினால் தண்டிக்கப்படுவீர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஹாரர் வகையைச் சார்ந்தது. ‘ஆண்மை தவறேல்’ படத்தில் நடித்த த்ருவ ராஜா, இந்தப்  படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சில படங்களுக்கு எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகப் பணிபுரிந்துள்ள பொற்கோ, இந்தப் படத்தை  இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்