அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள பைக் ஸ்டண்ட் காட்சிகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை வெளியாகாத ஆக்ஷன் காட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை #Valimai படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதில், 3 மணி நேரத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும், இப்படம் இன்னும் 8 நாட்களில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் புரொமோவை வெளியிட்ட நிலையில் இன்று பைக் ஸ்டண்டுகளை வெளியிட்டுள்ளார். அர்ஜூன் மற்றும் பைக்கர்ஸின் ஆக்சன் காட்சிகள் 4.22 நிமிடங்களுக்கு உள்ளதாகவும் பார்க்கும் ரசிகர்களுக்கு திரில்லிங் அனுபவங்களை இப்படம் கொடுக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
#Valimai one of the chasing scene between Arjun & bikers duration is 4.22mins