அஜித் -ன் வலிமை படத்திற்கு சென்சார் சான்றிதழ்

வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:32 IST)
அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை வெளியாகாத ஆக்‌ஷன் காட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை #Valimai படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதில்,  3 மணி நேரத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும், இப்படம் இன்னும் 8 நாட்களில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.  தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பைக் சேசிங் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

#Valimai - Censor certificate - Runtime : 2h58mins35sec - The First clip which is gonna make the crowd erupt in theatres..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்