பொது சேவை எல்லாம் போதும், நிறுத்து எல்லாத்தையும்: ராகவா லாரன்ஸ் அம்மா கூறியதால் பரபரப்பு

Webdunia
புதன், 20 மே 2020 (18:03 IST)
பொது சேவைகள் செய்thaது போதும் என்றும் இவர்கள் போன்றவர்களுக்கு பொது சேவை செய்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எனவே பொதுசேவையை நிறுத்து என்றும் ராகவா லாரன்சின் அம்மா தனது மகனிடம் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோடிக்கணக்கில் நிதி உதவியும் பொருளுதவியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு உதவி செய்துவரும் ராகவா லாரன்ஸின் தாயார் திடீரென டாஸ்மாக் கடைகளில் கூட்டமாக இருக்கும் புகைப்படத்தை காட்டி இவர்கள் போன்றவர்களுக்கும் உதவி செய்து என்ன பயன்? என்று கூறியதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் அம்மா மட்டுமின்றி அவருக்கு நெருக்கமான நண்பர்களும் நாமும் சரியானவர்களுக்குதான் உதவி செய்கிறோமா? என்ற சந்தேகத்தை எழுப்பியதாகவும் அவர் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்
 
ஆனால் தான் உதவி செய்வதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் ஒரே ஒரு குடிகாரனுக்காக உதவியை நிறுத்தினால் அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் கஷ்டப்படுவதை எப்படி தடுக்க முடியும் என்றும் எனவே வழக்கம்போல் தனது சேவையை தொடர உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும் குடிகாரர்கள் குடிக்கும் முன்னர் தங்களது வீட்டில் இருக்கும் குழந்தைகளை நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்