முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த மார்ச் 24ஆம் தேதி முதலே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் சிக்கிய பலர் தங்களுடைய சொந்த ஊருக்கும், சொந்த நாட்டிற்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதன்படி உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஆரோக்ய சேது செயலி கட்டாயம் தங்கள் மொபைலில் வைத்திருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சக பயணிகளிடம் இருந்து 4மீ இடைவெளியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் என்றும், விமான நிறுவன ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வெகுவிரைவில் உள்நாட்டு விமானங்கள் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது