இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (11:56 IST)
கீர்த்தி சுரேஷ்க்கு அடுத்த 3 மாதங்களில் 3 பெரிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது, விக்ரமுடன் நடித்த சாமி ஸ்கொயர் செப்டம்பர் 21ம் தேதியும், விஷாலுடன் நடித்த சண்டைக் கோழி 2 அக்டோபர் 17ம் தேதியும், விஜய்யுடன் நடித்த சர்கார் நவம்பர் 6ம் தேதியும் வெளியாக உள்ளது.
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
இந்நிலையில் கொம்பு வச்ச சிங்கம் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதில் பிக்பாஸ் ஆரவ், யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க உள்ளனார். சசிக்குமாருக்கு ஹிட்படமான சுந்தபாண்டியன் படத்தை இவர்  இயக்கி உள்ளார்.
 
இதனிடையே சர்கார் படத்துக்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் ஆகவில்லை என கீர்த்தி சுரேஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்