தனுஷ் படத்தில் நாயகியாக அனு இமானுவேல்!

ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (18:32 IST)
தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அனு இமானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

 
தமிழ் சினிமாவில்  பன்முகத் திறமைசாலியான  தனுஷ் முதன்முதலாக ‘பவர் பாண்டி’ படத்தில் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். 
இப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங்    தனுஷ், மடோனா செபாஸ்டியன், 
ஆகியோர் நடித்திருந்தனர்.  இப்படம் ரசிகர்களகடையே பெரும் வரவேற்பை பெற்றது. 
 
இப்போது, ‘பவர் பாண்டி’யைத் தொடர்ந்து, தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
 
தனுஷின் புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதிராவ் உள்பட பலர் நடிக்கின்றனர். 
 
இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க நடிகை அனு இமானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்