2022-ல் வெளி நாட்டில் வசூல்குவித்த இந்திய படங்கள்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:35 IST)
2022 ஆம் ஆண்டு   வட அமெரிக்காவில் ரிலீஸான இந்திய சினிமாக்களில் ஆர்.ஆர்.ஆர் படம்தான் அதிக வசூலீட்டியுள்ளதாகத் தகவல் வெளியகியுள்ளது.

உலக சினிமாவில் ஹாலிவுட்டிற்கு அடுத்து அதிகப் பொருட் செலவில் எடுக்கப்படுவது இந்தியாவில்தான்.

இந்தியாவில் பிராந்திய  மொழிகளுக்கு ஏற்ப மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளது போல், அந்தந்த மா நிலங்களுக்கு ஏற்ப டோலிவுட், பாலிவுட், கோலிவுட், மாலிவுட், சான்டல்வுட் என அழைக்கப்படுகிறது.

இந்திய சினிமா என்றாலே பாலிவுட் என்ற நிலைமையைத் தாண்டி இன்று  தமிழின் கோலிவுட் சினிமாவும், தெலுங்கின் டோலிவுட்டும், மிகச்சிறந்த கதையம்சம் உள்ள மலையாள சினிமாவின் மாலிவுட்டும், கேஜிஎஃப்1, 2 வெற்றியின் மூலம் உலக அளவில் கன்னட சினிமாவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில்,2022 ஆம் ஆண்டு, வடமெரிக்காவில் ரிலீஸான இந்திய சினிமாவில், ஆர்.ஆர்.ஆர் படம் $469,124, கேஜிஎஃப் $290,402 , பீலா நாயக் $198,832, விக்ரம் $121, 171  , சமீபத்தில் ரிலீஸான சீதா ராமம் $70,101 வசூலூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்