விக்ரமின் ‘கோப்ரா’ ரிலீஸ் தேதி இதுதான்: அஜய்ஞானமுத்து அறிவிப்பு!

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:29 IST)
விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சற்று முன் ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது
 
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்