கமல்-ஷங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (14:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்திற்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய திரையுலகினர் மட்டுமின்றி ஹாலிவுட் பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் ஷங்கரின் அடுத்த படமான 'இந்தியன் 2' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய சவாலான பணி ஷங்கர் கண்முனே உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் போட்டோஷூட் பணியும், செட் அமைக்கும் பணியும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

'2.0' படத்தை பிரமாண்டமாக தயாரித்த லைகா நிறுவனமே 'இந்தியன் 2' படத்தையும் தயாரிக்கவுள்ளது. கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்