இந்நிலையில் மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில், ரஜினி இண்ட்ரொடக்ஷன் போது படத்தை 3 நிமிடங்கள் நிறுத்தியுள்ளனர். அப்போது ரசிகர்கள் ஆரவாரமாய் கரகோஷங்களை எழுப்பி தலைவா தலைவா என தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ரஜினி மீதான மவுசு எக்காலத்திலும் குறையாது என்பதற்கு இந்த சம்பவம் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.