" இந்திய பாக்ஸ் ஆஃபீஸ் ரெகார்ட்டுகள் மாற்றி எழுதப்படும்" - அனிருத் !

வியாழன், 29 நவம்பர் 2018 (13:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம்  பார்த்து மெய்சிலிர்த்து போன இளம் இசையமைப்பாளர் அனிருத்  இந்திய பாக்ஸ் ஆஃபீஸ் ரெகார்ட்டுகள் மாற்றி எழுதப்படும் என தெரிவித்திருக்கிறார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனிருத் தற்போது 2.0 படக்குழுவை பாராட்டியதுடன், பாக்ஸ் ஆஃபீஸ் ரெகார்ட்டுகள் மாற்றி எழுதப்படும் என ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
 
இது ரஜினி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியை உண்டாகியுள்ளது. 

#2point0 OUT OF THE WORLD EXPERIENCE . ALL INDIAN BOX OFFICE RECORDS WILL BE REWRITTEN

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்