இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான டைட்டில் கார்ட்… இணையத்தில் வைரலாகும் காணொளி துணுக்கு!

vinoth
வெள்ளி, 12 ஜூலை 2024 (08:05 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியது மட்டுமில்லாமல், அதிகமாக செலவு செய்து பல நாடுகளுக்கும் சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டனர் படக்குழுவினர். ஆனாலும் படத்துக்கு முன்பதிவு சராசரி அளவிலேயே நடந்தது. படம் ரிலீஸாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் அதன் பின்னர் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் சிறப்புக் காட்சி உள்ளிட்ட வேறு சில நாடுகளில் படம் ரிலீஸாகிவிட்ட நிலையில் படத்தில் கமல்ஹாசனுக்காக டைட்டில் கார்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கமல்ஹாசன் பெயர் போடும்  முன்பாக, அவர் இதுவரை நடித்த முக்கியமான படங்களில் அவரின் தோற்றத்துக்காக எவ்வளவு மெனக்கெட்டுள்ளார் என்பதைக் காட்டும் விதமாக, அந்த கெட்டப்புகள் எல்லாம் வரிசையாக முகமூடி போல கலைந்து இறுதியில் இந்தியன் தாத்தாவின் கெட்டப் தோன்றுகிறது. கமல் ரசிகர்கள் இந்த வீடியோ துணுக்கை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்