தமிழ் சினிமா இயக்குனர்கள் அட்லிக்கு பார்ட்டி வச்சு கொண்டாடனும்… பிரபல தயாரிப்பாளர் கருத்து!

vinoth
வெள்ளி, 12 ஜூலை 2024 (07:57 IST)
கடந்த சில ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படும் பாலிவுட் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. அமீர்கான், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் போன்ற பெரும் நட்சத்திர பட்டாளம் கொண்டுள்ள நடிகர்களின்  படங்கள் கூட வசூலுக்கு தடுமாறின. ஆனால் அதிலிருந்த ஷாருக் கான் மீண்டு வந்து கடந்த ஆண்டு மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

பாலிவுட் சினிமாவின் இந்த சறுக்கலுக்கு காரணம் என்னவென தொடர்ந்து பேசிவரும் இயக்குனர் அனுராக் காஷ்யப் “இந்தி திரையுலகில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் 500 முதல் 800 கோடி ரூபாய் வரை வசூலையே குறிவைக்கிறார்கள். யாரும் நல்ல திரைப்படம் எடுக்க நினைப்பதில்லை. படங்களை ஊமையாக்கி, பிறகு கதைகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.ஒருபோதும் அசலான படைப்புகளை எடுக்காமல், மற்றவர்களின் படங்களை காப்பி அடித்தே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என சாடி வருகிறார்.

இந்நிலையில்தான் தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட்டுக்கு சென்று வெற்றிப்படங்களைக் கொடுக்க தொடங்கியுள்ளனர். அதில் சமீபமாக தமிழ் சினிமாவில் இருந்து சென்று மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருப்பவர் இயக்குனர் அட்லி. அட்லியின் வெற்றி குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “அட்லி பாலிவுட்டில் கோலிவுட் இயக்குனர்களுக்கு கதவை திறந்து வைத்துள்ளார். அவருக்கு தமிழ் இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து பார்ட்டி வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்