விக்ரம் ஸ்டைலில் இந்தியன் 2…. இடைவேளைக்கு முன்பாகதான் கமல் வருவாரா?

vinoth

வியாழன், 11 ஜூலை 2024 (07:45 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனை விட அதிக நேரம் வரும் விதமாக சித்தார்த்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்தின் இரண்டாம் பாதியில் தான் இந்தியன் தாத்தா வருவாராம். அதனால் படக்குழுவுடன் இணைந்து சித்தார்த்தும் பல இடங்களில் நேர்காணல் கொடுத்து படத்துக்கு ப்ரமோஷன் செய்து வருகிறார். ஆனால் கமல் கொஞ்ச நேரமே வருவார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் கிட்டத்தட்ட இடைவேளைக்கு முன்புதான் வருவாராம். அதுவரை அவர் பற்றிய பில்டப் காட்சிகள்தான் வருமாம். விக்ரம் படத்தில் கமலின் அறிமுகமும் இதுபோல இடைவேளைக்கு முன்புதான் வருவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்