ட்யூட் படத்தில் இளையராஜா பாடல்கள்.. தனி வழக்காக பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுரை!

வியாழன், 23 அக்டோபர் 2025 (11:00 IST)
தமிழ் சினிமாவில் தற்போது பழைய பாடல்களை பயன்படுத்தி வருவது ஒரு ட்ரண்ட் ஆகியுள்ளது. இதில் பெரும்பாலானப் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களாகவே உள்ளன. ஆனால் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது சம்மந்தமாக சில குளறுபடிகள் நிலவி வருகின்றன.

தன்னுடைய பாடல்களின் காப்புரிமையைப் பெற்றுள்ள சோனி, எக்கோ ரெக்கார்ட்ஸ், ஓரியண்டல் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி ஈட்டிய வருவாயை சமர்ப்பிக்க நீதிமன்றம் சோனி ம்யூசிக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது இளையராஜாவின் வழக்கறிஞர் ‘தற்போது வெளியாகியுள்ள ட்யூட் படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என வாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதிபதி “அது சம்மந்தமாக வேண்டுமானால் தனியாக வழக்குத் தொடர்ந்து கொள்ளலாம்” என அறிவுரைக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்