‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

vinoth

சனி, 18 அக்டோபர் 2025 (15:33 IST)
ஏப்ரல் மாதம் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. ஆனால் விமர்சன ரீதியாக அந்த படம் கழுவி ஊற்றப்பட்டது. திரையரங்கில் இந்த படம் வசூல் வேட்டை நடத்தினாலும் தயாரிப்பாளர்களுக்குப் பெரிய லாபம் இல்லை என்று சொல்லப்பட்டது.

அதற்குக் காரணம் அஜித்தின் சம்பளம்தான் என சொல்லப்பட்டது. ஏனென்றால் அஜித்தின் மார்க்கெட் தாண்டிய அளவுக்கு இந்த படத்தில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு அதனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக சொல்லப்பட்டது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் சேட்டிலைட் வியாபாரமும் இன்னும் நடக்கவில்லை.

இந்நிலையில் இந்த தகவல்களை தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நவீன் பேசும்போது “குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் சாருக்கு ஒரு பிளாக்பஸ்டராக அமைந்தது. இந்த படம் எங்களுக்குப் பெரியளவில் இலாபம் இல்லை. அதே நேரத்தில் பெரிய நஷ்டமும் இல்லை. ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தோடு தமிழில் அறிமுகமானதில் மகிழ்ச்சியடைகிறோம். அஜித் சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்