தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து ஹிட்ஸ்களைக் கொடுத்தவர் ஜீவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்தக் கதைகள் சொதப்பியதால் தற்போது மார்க்கெட்டிலேயே அவர் இல்லை. அதனால் மீண்டும் கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள “படிச்சுப் படிச்சு சொன்னேனடா… கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடான்னு” என்ற வசனம் சமீபத்தைய தமிழக அரசியல் சூழலை நய்யாண்டி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கலகலப்பான டீசராக வெளியாகியுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.