படங்களில் பிஸியாக இருந்தாலும், இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் ஜூன் 26 ஆம் தேதி மதுரையில் இசையென்றால் இளையராஜா என்ற கச்சேரியை நடத்துகிறார். இந்த கச்சேரியில் கலந்துகொண்டு வடிவேலு இளையராஜா தான் பாடிய சில பாடல்களை பாட உள்ளதாக அறிவித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.