’சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: அசத்தல் தகவல்!

செவ்வாய், 14 ஜூன் 2022 (18:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்திரமுகி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 
 
ராகவா லாரன்ஸ் மற்றும் வைகைப்புயல் வடிவேலு ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்தை பி வாசு இயக்க உள்ளார்.எம்எம் கீரவாணி இசையில் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

Elated to announce

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்