விடுதலை இசை வெளியீடு… இளையராஜா கோபத்துக்கு சூரிதான் காரணமா?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:39 IST)
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் விழாவில் இளையராஜா பேச வந்தபோது அரங்கில் இருந்தவர்கள் கத்திக் கூச்சல் போட்டனர். இதனால் கோபமான இளையராஜா ‘கத்தாமல் இருங்கள். அமைதியாக இருந்தால்தான் நான் பேசுவது உங்களுக்குக் கிடைக்கும். இல்லையென்றால் மைக்கை கொடுத்துவிட்டு போயிடுவேன்” எனக் கூறினார். இப்படிக் கத்திக் கூச்சல் போட்டவர்கள் சூரி தரப்பு ஆட்கள் என்று சொல்லப்படுகிறது. அரங்கில் கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக சூரிதான் ஆட்களை வரவழைத்தார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்