பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

Prasanth Karthick

புதன், 14 மே 2025 (09:24 IST)

சந்தானம் நடித்து வெளியாக உள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் வரும் கோவிந்தா என்ற பாடலை நீக்கக் கோரி பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

 

ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து தயாராகியுள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. நடிகர் ஆர்யா தயாரித்திருக்கும் இந்த படம் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

அவ்வாறாக சமீபத்தில் வெளியான ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடல் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் ஸ்துதி பாடலாக விளங்கும் பாடலின் மெட்டை எடுத்து ரீமேக் செய்து வரிகள் அமைத்து அந்த பாடலை பாடியுள்ளனர். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக ஜன சேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த ஜனசேனா கட்சியினர் அந்த பாடல் வீடியோவை போட்டுக் காட்டி அதுகுறித்து அவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரிக்கும் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது திருப்பதி காவல் நிலையத்திலும் ஜன சேனாவினர் புகார் அளித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்