வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இது குறித்த விழாவில் இசைஞானி இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்
கடல் அலை என்பது ஒன்று கிடையாது ஒவ்வொரு அலையும் வெவ்வேறு அதே போல் தான் வெற்றிமாறனின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு என்று கூறினார். இசையமைப்பாளர் இளையராஜா குறித்து வெற்றிமாறன் பேசியபோது என் உணர்வு ஒரு வார்த்தையாகி அதை உள்வாங்கி அவர் ஒளியாய் கொடுத்து மீண்டும் என் உணர்வாக மாறுவது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார்.