சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

Prasanth Karthick
புதன், 8 ஜனவரி 2025 (17:55 IST)

இந்திய சினிமா இசையின் அடையாளமாக விளங்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இளம் இசையமைப்பாளர் அனிருத்க்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் டிமாண்ட் உள்ள இசையமைப்பாளராக அனிருத் இருக்கிறார். ஆனால் சமீப காலமாக பல படங்களில் இவர் அமைக்கு பாடல்கள் ஒரே மாதிரியாக உள்ளதாகவும், காப்பி அடித்தது போல இருப்பதாகவும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

 

இந்நிலையில் ஜெயம்ரவி நடித்து ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அனிருத்தை குறிப்பிட்டு பேசிய அவர் “இப்போது அனிருத் நன்றாக இசையமைக்கிறார். பெரிய படங்களுக்கு ஹிட் கொடுக்கிறார். உங்களுடைய வெற்றிக்கு எனது பாராட்டுகள்.

 

ஆனால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் அதிகமாக கிளாசிக்கல் இசையை கற்றுக்கொண்டு, கிளாசிக்கல் இசையில் பாடல்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க முடியும்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்